தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் 18 உறுப்பினர்களுடன் மாற்றியமைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 SEP 2026 6:28PM by PIB Chennai
மத்திய அரசு, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தை மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது. இந்த மறுசீரமைப்பு 3 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இதில் எது முந்தையதோ அதுவரை அமலில் இருக்கும்.
1952-ம் ஆண்டு இயற்றப்பட்ட திரைப்படச் சட்டத்தின் பிரிவு 3-ன் உட்பிரிவு (1) மற்றும் 2024-ம் ஆண்டின் திரைப்படச் சான்றிதழ் விதிகளின் விதி 3 ஆகியவற்றின் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தில் 18 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்:
வினோத் அனுபம், மனோஜ் ஜோஷி, அபிஷேக் ஜெயின், ரிக்கி கேஜ்,
பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், சுப்ரியா யர்லகட்டா, யதீந்திர மிஸ்ரா, ரூபாலி கங்குலி, ப்ரீத்தி ஜிந்தா, நீலா மாதவ் பாண்டா, பங்கஜ் திரிபாதி, பிரசன்ஜித் சட்டர்ஜி, பல்லவி ஜோஷி, நிஷிகந்தா வாட், வாமன் கேந்திரே, ரமேஷ் படாங்கே.
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தை மாற்றியமைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2026 செப்டம்பர் 16-ம் தேதி வெளியிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311000®=3&lang=1
***
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311511)
வருகையாளர் எண்ணிக்கை : 7