தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 22-ம் தேதி குஜராத்தில் நடைபெற உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 1:55PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திரெளபதி தலைமையில் 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, செப்டம்பர் 22-ம் தேதி குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெறவுள்ளது.
2024-ம் ஆண்டில் இந்திய திரைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய திரைக்கலைஞர்கள் இவ்விருது விழாவில் பங்கேற்கின்றனர். திரைத்துறையில் உயரிய, பெருமைமிகு விருதாகக் கருதப்படும் தேசிய விருதுகள் 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மொழி, கலாச்சாரம், பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், மிகச்சிறந்த முறையில் உருவாக்கப்படும் திரைப்படங்கள், முழுநீள திரைப்படங்கள் அல்லாத படங்களுக்கு கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள், மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. தேசிய விருதுகள் வழங்கும் விழா வழக்கமாக தலைநகர் புதுதில்லியில் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடைபெறவுள்ளது.
72வது திரைப்பட விருதுக்காக நாட்டின் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், ‘ஆர்ட்டிக்கல் 370’ திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. முழுநீள திரைப்படம் அல்லாத பிரிவில் ‘பான்கார்’ படமும், சிறந்த ஆவணப்படமாக ‘ராம்-நவமி’ படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
‘பிரம்மயுகம்’ படத்திற்காக மம்முட்டியும், ‘சாந்து சாம்பியன்’ படத்திற்காக கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதைப் பெறவுள்ளனர். ‘ஆர்ட்டிக்கல் 370’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய யாமி கவுதம் சிறந்த நடிகைக்கான விருதைப் பெறவுள்ளார். ‘ஸ்வதந்தர்யவீர்சாவர்க்கர்’ படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது ரன்தீப் ஹூடாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மராத்தி, சந்தாலி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, துளு, மராத்தி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிறந்த திரைப்படங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ‘கல்கி 2898 ஏடி’, ‘அமரன்’, ‘புஷ்பா: தி ரூல் பார்ட்-2’, ‘போல் புல்லய்யா 3’, ‘ஸ்ட்ரீ 2’ ஆகிய படங்களும் தேசிய விருதுக்குத் தகுதி பெற்றுள்ளன. முதன்முறையாக சந்தாலி மொழியில் உருவான படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட உள்ளது. சிறந்த திரை விமர்சகருக்கான தேசிய விருதை சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா பெறவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307783®=48&lang=2
***
TV/LN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307971)
வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada