பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஊட்டச்சத்து மாதம் 2026 இயக்கத்தை மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி செப்டம்பர் 9 அன்று தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 10:46AM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு மையத்தில் 2026 செப்டம்பர் 9 அன்று, 9-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2026 இயக்கத்தை மத்திய மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கவுள்ளது. இந்நிகழ்வை, உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மத்திய மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாகூர் ஆகியோர் முன்னிலையில் மத்திய மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தொடங்கி வைக்கவுள்ளார்.
2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு ஊட்டச்சத்துமிக்க இந்தியா அடித்தளமாகத் திகழவேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடி-யின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் தேசிய வளர்ச்சி திட்டத்தின் மையத்தில் ஊட்டச்சத்தை வலியுறுத்துவதற்காக 2018-ம் ஆண்டு ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307291®=3&lang=1
***
SS/IR/PS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2307376)
வருகையாளர் எண்ணிக்கை : 7