பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் பிரான்ஸ் அதிபர் தொலைபேசியில் பேச்சு: மேற்காசிய நிலவரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசனை
இடுகை இடப்பட்ட நாள்:
16 APR 2026 10:24PM by PIB Chennai
பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர். ஹார்மூஸ் நீரிணையில் பாதுகாப்பை மீட்டெடுப்பது, கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தில் அவர்கள் உடன்பட்டனர்.
இந்தப் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்துள்ளதாவது:
“எனது அன்பிற்குரிய நண்பரான அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நாங்கள் மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்து விவாதித்ததுடன், ஹார்மூஸ் நீரிணையில் பாதுகாப்பையும் தடையற்ற கப்பல் போக்குவரத்தையும் அவசரமாக மீட்டெடுப்பதன் அவசியம் குறித்தும் ஒருமித்த கருத்தைப் பரிமாறிக் கொண்டோம். இப்பகுதியிலும் அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான எங்கள் நெருக்கமான ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252788®=48&lang=2
***
SS/RB/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2306468)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam