தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு இந்திய வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பின் ஏழு விருதுகளை வென்றுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2026 1:59PM by PIB Chennai

இந்திய வெளியீட்டாளர்கள் விருது கூட்டமைப்பின் மதிப்பிமிக்க 7 விருதுகளை தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு வென்றுள்ளது.

இந்தி, ஆங்கிலம், உருது மொழி வெளியீடுகளில் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுப் புத்தகம், பருவ இதழ்கள், புத்தகங்கள் ஆகியவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 7 விருதுகளில் 4 வெளியீடுகள் 2-வது பரிசையும் 3 வெளியீடுகள் 3-வது பரிசையும் வென்றுள்ளன.

விருதுவென்ற புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஆசிரியர்களை வெளியீட்டுப் பிரிவு தலைமை இயக்குநர் டாக்டர் தீரஜ் கக்கடியா பாராட்டினார். இந்த சாதனையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் தீரஜ் கக்கடியா, வெளியீட்டுப் பிரிவு பெற்றுள்ள 7 விருதுகள் அதனுடைய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரின் கூட்டு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, சிறப்பான செயல்பாடு ஆகியவற்றுக்கு சான்றாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். உயர்தரமிக்க, நம்பகமான, பயனுள்ள தகவல்களை வெளியிட இந்த அங்கீகாரம் தங்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாகக் கூறினார். அறிவுசார், இலக்கியம், கலாச்சாரம், நாட்டின் வளர்ச்சி தொடர்பான முக்கிய கருத்துக்கள் கண்ணோட்டங்களைக் கொண்ட இந்தி, ஆங்கிலம், உருதுமொழிகளின் சிறந்த புத்தகங்கள், இதழ்கள் மூலம் வாசகர்களைச் சென்றடைவதில் வெளியீட்டுப் பிரிவு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

 

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தலைப்பில் 2026 ஜூலையில் வெளியான யோஜனா (இந்தி) பத்திரிகை மற்றும் வீட்டு இதழ்கள் (இந்தி) பிரிவில் இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளது. குருக்‌ஷேத்ரா ஆங்கில மொழிப் பிரிவில் 2-வது பரிசைப் பெற்றுள்ளது.

பாரத் 2026 (இந்தி) குறிப்பெடுத்தல் புத்தகப் பிரிவில் 2-வது பரிசை வென்றுள்ளது.

பொது மற்றும் வர்த்தகப் புத்தகங்கள் – ஆங்கிலப் பிரிவில் விங்ஸ் டு அவர் ஹோப்ஸ் – பகுதி 2, 2-வது பரிசைப் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்கான புத்தகம் – இந்திப் பிரிவில் தர்த்தி கி செஹத் 3-வது பரிசைப் பெற்றுள்ளது.

கலை மற்றும் விரிவான தகவல்கள் புத்தகம் – இந்திப் பிரிவில் ரங்கோலி ரூப் சூர் லே கி 3-வது பரிசை வென்றது.

பத்திரிகை மற்றும் வீட்டு இதழ்கள் வகைப் பிரிவில் 2026 ஜூலையில் வெளியான ஆஜ்கல் உருது 3-வது பரிசை வென்றது.

விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த வெளியீடுகள், நாட்டின் வளர்ச்சி, பொதுக் கொள்கை, இலக்கியம், கலாச்சாரம், கலை, சிறுவர் இலக்கியம், சமகாலப் பிரச்சனைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான பாடங்களை உள்ளடக்கியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303038&reg=3&lang=1

****

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303302) வருகையாளர் எண்ணிக்கை : 48