மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஆதார் செயலி பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது
प्रविष्टि तिथि:
20 AUG 2026 1:45PM by PIB Chennai
ஆதார் செயலி 50 மில்லியன் (5 கோடி) பதிவிறக்கங்கள் என்ற முக்கிய மைல் கல்லை அடைந்துள்ளது. இது மக்களிடையே வசதிமிக்க, டிஜிட்டல் சார்ந்த ஆதார் சேவைகளின் பயன்பாடு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
இந்த மைல்கல் மக்களுக்கும், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திற்கும் இடையே, ஆதார் செயலி ஆற்றிவரும் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் ஆதார் எண் வைத்திருப்போர் தங்களுடைய ஸ்மார்ட்போன் வழியாக மொபைல் எண், முகவரி, மின்னஞ்சல் ஆகியவற்றைப் புதுப்பித்தல், பயோமெட்ரிக் அணுகல் வசதியை நிறுத்துதல்/பயன்படுத்துதல், இ-ஆதார் பதிவிறக்கம் செய்தல் போன்ற பல்வேறுச் சேவைகளைச் பெறமுடியும்.
இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய மொபைல் எண்ணை புதுப்பித்துள்ளனர். அதேபோல், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட முகவரி மாற்றங்களும் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரி புதுபித்தல்களும் இந்த செயலி மூலம் நடைபெற்றுள்ளது.
இச்சேவைகளின் பயன்பாடு அதிகரித்து வருவது, ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமல் டிஜிட்டல் முறையில் ஆதார் தொடர்பானச் சேவைகளைப் பெறுவதில் மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
ஆதார் செயலியின் வளர்ச்சிக்கு இடையே பாதுகாப்பான, வசதிமிக்க நேரடி சரிபார்த்தலுக்கான கட்டமைப்பையும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தொடர்ந்து விரிவுபடுத்துகிறது. ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 200-க்கு மேற்பட்ட நிறுவனங்களை நேரடி சரிபார்ப்பைக் கோரும் நிறுவனங்களாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் இணைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301481®=3&lang=1
***
SS/IR/SM/SH
(रिलीज़ आईडी: 2301717)
आगंतुक पटल : 5