தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
12-வது பிரிக்ஸ் தகவல் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
20 AUG 2026 12:43PM by PIB Chennai
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், 12-வது பிரிக்ஸ் தகவல் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம் நாளை (21.08.2026) நடைபெறுகிறது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றம், புத்தாக்கம், வலிமையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார். இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் “வலிமை, புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மையைக் கட்டமைத்தல்” என்ற மையக்கருத்தின் கீழ் இக்கூட்டம் நடைபெறுகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, எதிர்கால தகவல் தொடர்பு கட்டமைப்புகள், இணையப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை குறித்து உறுப்பு நாடுகள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள இக்கூட்டம் முக்கிய வாய்ப்பாக அமையும். டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பு, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும்.
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் போது வலிமையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, எதிர்கால கட்டமைப்புகள், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, புத்தாக்கம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301445®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2301662)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Malayalam
,
Telugu
,
Gujarati
,
Assamese
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Punjabi
,
Kannada