சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
12-வது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம்: மக்கள் நலன் சார்ந்த, செயல்பாட்டுக்கு உகந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு இந்தியா அழைப்பு
प्रविष्टि तिथि:
18 AUG 2026 3:28PM by PIB Chennai
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், 12-வது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள், பிரதிநிதிகளை வரவேற்றார். இதில் உரையாற்றிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், உலகின் தெற்கு நாடுகளின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, மக்கள் நலனை முன்னிறுத்தும் அணுகுமுறையுடனும் மனிதநேயத்தை முதன்மையாகக் கொண்டும் பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, பேரிடர் அபாயங்கள் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் வளரும் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப கூட்டு ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளும் மனித வளர்ச்சியும் ஒருங்கிணைந்து பயணிக்க முடியும் என்பதை இந்தியாவின் ‘இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை (லைஃப்)’, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கம் ஆகியவை நிரூபித்துள்ளதாக அவர் எடுத்துரைத்தார். நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல், காடுகள் வளர்ப்பு, காட்டுத்தீ மேலாண்மை, சுழற்சிப் பொருளாதாரம் ஆகிய நான்கு முக்கிய முன்னுரிமைகளை இந்தியா கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தின் முடிவில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்களின் கூட்டறிக்கை ஒருமனதாக ஏற்கப்பட்டு, நான்கு அறிவுத் தொகுப்புகள் வெளியிடப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300822®=3&lang=1
-----
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2300960)
आगंतुक पटल : 8