சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம்

प्रविष्टि तिथि: 18 AUG 2026 1:05PM by PIB Chennai

இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தில், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரிக்ஸ் சுற்றுச்சூழல் பணிக்குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிவுசார் தொகுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

இந்த ஆவணங்கள் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே முன்னணியில் உள்ள நடைமுறைகள் அறிவுசார் அமைப்புகள், புதுமை கண்டுபிடிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. பிரிக்ஸ் அமைப்பின் சுற்றுச்சூழல் பணிக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை அடுத்து இந்தத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த தொகுப்புகள், நீடித்த வாழ்வியல் முறைகளைச் செயல்படுத்துவதில் உள்ள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் குறித்த விவரங்கள் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட உறுப்பு நாடுகளிடமிருந்து பெறப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

கொள்கை ரீதியான புதுமை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, சமூகப் பங்கேற்பு, உற்பத்தி, சுழற்சி பொருளாதாரத்திற்கான நடைமுறைகள், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடைமுறைகள், தூய்மை எரிசக்தி, பசுமை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதின் மூலம் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் நீடித்த வாழ்வியல் முறைகளை மாற்றியமைக்கும் நடைமுறைகள் குறித்து  இந்தத் தொகுப்பு ஆவணப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300770&reg=3&lang=1

***

SS/SV/LDN/SH


(रिलीज़ आईडी: 2300933) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada , Urdu , Bengali , Bengali-TR