தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான 12 நிமிட விளம்பர கால வரம்பு நீக்கம்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 8:39PM by PIB Chennai

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான 12 நிமிட விளம்பர கால அளவு வரம்பை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

 

தொலைக்காட்சிகளுக்கான விளம்பர கால அளவு வரம்பு, கேபிள் தொலைக்காட்சி வலையமைப்பு விதிகள், 1994-ன் கீழ் 2006-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, தொலைக்காட்சி ஒலிபரப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2006-ல் 62 தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 900-க்கும் மேற்பட்ட அலைவரிசைகள் உள்ளன.

 

அக்காலத்தில், தொலைக்காட்சி அலைவரிசைகளை வழங்கும் முக்கிய ஊடகமான கேபிள் தொலைக்காட்சி, அனலாக் தொழில்நுட்பத்தில் இயங்கியதுடன், குறைந்த அளவிலான அலைவரிசைகளை மட்டுமே வழங்கும்  திறன் கொண்டிருந்தது. இதனால் நுகர்வோருக்கு மிகக் குறைந்த அளவிலான தேர்வுகளே கிடைத்தன. கேபிள் தொலைக்காட்சித் துறை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அனைத்து தொலைக்காட்சி விநியோகத் தளங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலேயே இயங்குகின்றன. இந்தத் தளங்கள் தற்போது 300 முதல் 500 அல்லது அதற்கும் மேற்பட்ட அலைவரிசைகளை வழங்கி, நுகர்வோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அதிகப்படியான தேர்வுகளையும் வழங்குகின்றன.

 

தொலைக்காட்சி ஒலிபரப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, விளம்பர கால அளவு தொடர்பான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உணரப்பட்டது. இந்தியாவில், இந்தத் துறை பெருமளவில் விளம்பர வருவாயையே சார்ந்திருக்கிறது. மேலும், விளம்பரங்களின் கால அளவைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏதுமில்லாத டிஜிட்டல் ஊடகங்களுடன் ஒப்பிடுகையில், பாரம்பரிய தொலைக்காட்சி சேனல்களுக்குச் சமமான போட்டிச் சூழல் இல்லாத நிலை நிலவுகிறது.

 

தொலைக்காட்சித் துறைக்குள்ளும், அத்துறைக்கும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இடையிலும் சந்தையிலும் போட்டி நிலவுவதாகத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கருதுகிறது. நியாயமான போட்டியை ஊக்குவிக்கவும், எளிதாகத் தொழில் செய்வதை உறுதி செய்யவும், விளம்பரங்களின் கால அளவு மீதான கட்டுப்பாட்டை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

 

கேபிள் தொலைக்காட்சி வலையமைப்பு விதிகள், 1994-ல் செய்யப்பட்ட திருத்தம் குறித்த அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இந்த நீக்கம் நடைமுறைக்கு வரும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299626&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2299710) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Gujarati , Kannada , Malayalam