நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு : இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

प्रविष्टि तिथि: 13 AUG 2026 3:58PM by PIB Chennai

2026 ஜூலை 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், 2026 ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை அன்று காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 25 நாட்கள் காலப்பகுதியில் 19 அமர்வுகள் நடைபெற்றன.

 

இந்தக் கூட்டத்தொடரின் போது மக்களவையில் 11 மசோதாக்களும், மாநிலங்களவையில் 2 மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 12 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆகும்.

 

மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த அவசரச் சட்டம் - 2026, வருமான வரி திருத்த அவசரச் சட்டம் - 2026 ஆகிய அவசரச் சட்டங்களின் விதிகளை மாற்றி அமைத்து உள்ளடக்கிய இரண்டு மசோதாக்கள், இரு அவைகளாலும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

 

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, பரிசீலனைக்காக இரு அவைகளின் கூட்டுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.

 

பொதுத் தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் கவலைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு, பொதுத் தேர்வு முறையின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக, 2024-ம் ஆண்டின் மூலச் சட்டத்தைத் திருத்துவதற்காக, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா, 2026 அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298901&reg=3&lang=1

(Release ID : 2298901)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299243) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam