சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யானைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்போது, வனங்கள், உயிரி பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது – மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ்

प्रविष्टि तिथि: 12 AUG 2026 11:19AM by PIB Chennai

உலக யானைகள் தினம் 2026-யொட்டி செய்தி வெளியிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், யானைகள், மனிதர்களுக்கான பகிரப்பட்ட எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், இந்தியாவில் 14 மாநிலங்களில் 33 யானைக் காப்பகங்களும் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட 150 யானை வழித்தடங்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு, வலிமையான நடவடிக்கைகள் ஆகியவை மனிதர்கள்-யானைகள் இடையேயான மோதலைத் தவிர்த்து யானைகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக திரு யாதவ் தெரிவித்துள்ளார்.

யானைகளின் எதிர்காலத்தை நாம் பாதுகாக்கும்போது, நமது வனங்கள், உயிரி பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல் பாரம்பரியம் ஆகியவற்றையும் பாதுகாக்கிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இந்திய வனங்கள், நிலப்பரப்புகளில் யானைகள் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியையொட்டி, சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் பூமியில் வளமான மிகவும் பன்முகத்தன்மைக் கொண்ட நிலப்பரப்புகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று கூறியுள்ளார்.  உலக அளவில் ஆசிய யானைகளில் சுமார் 60% இந்தியாவில் இருப்பதாகவும் அவை நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியத்தின் வாழும் அடையாளமாகத் திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298047&reg=3&lang=1

***

SS/IR/SU/KR


(रिलीज़ आईडी: 2298151) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Malayalam