நிதி அமைச்சகம்
யுபிஐ செயலி வாயிலான பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படாது - மத்திய அரசு விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2026 6:40PM by PIB Chennai
யுபிஐ செயலி வாயிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நுகர்வோர் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
தனிநபர்களுக்கு இடையேயான அனைத்துப் பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும்.
வர்த்தகர்களுக்கான குறைந்தபட்ச தள்ளுபடி விகிதம் தொடர்பான கட்டண விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், அவை குறிப்பிட்ட வரம்பிற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்தக் கட்டண விகிதம் மிகக் குறைவாகவும், பற்று அல்லது கடன் அட்டைகளுக்கான குறைந்தபட்ச விகிதம், கட்டணங்களை விட பல மடங்கு குறைவாகவும் இருக்கும்.
யுபிஐ செயலியில், வணிகர்களுக்கான பெரும்பாலான பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும். குறைந்தபட்ச வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது குறிப்பிட்ட வரம்பின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும், அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் பொதுவான கட்டணமாக விதிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பணப் பரிவத்தனைகள், தீர்வு அமைப்புகள் சட்டம், 2007'-ன் பிரிவு 10 ஏ -வை திருத்துவதற்கான வரிவிதிப்பு, பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026'-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றிய பிறகு, குறைந்தபட்ச கட்டணம் ஏதேனும் விதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தேசிய பரிவத்தனைக் கழகம் தலைமையிலான யுபிஐ சேவைகள் வழிநடத்தல் குழு முடிவெடுக்கும்.
மேலும் இது தொடர்பான கொள்கை மாற்றங்களுக்குப் பின்னணியில் அதன் தாக்கங்கள் இருக்கலாம் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆதாரமற்றது, முற்றிலும் பொய்யானது மற்றும் தவறான வழிகாட்டுதல் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296594®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296630)
வருகையாளர் எண்ணிக்கை : 161
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Malayalam
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada