பிரதமர் அலுவலகம்
ஆகஸ்ட் 8 அன்று நடைபெறும் தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 9:35AM by PIB Chennai
இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) தில்லி வளாகத்தில் 8 ஆகஸ்ட் 2026 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இவ்விழாவில் பட்டம் பெறவுள்ள 587 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.
மாணவர்களின் சிறந்த கல்விச் சாதனையைக் அங்கீகரிக்கும் வகையில், குடியரசுத்தலைவரின் தங்கப்பதக்கம், இயக்குநரின் தங்கப்பதக்கம், சங்கர் தயாள் சர்மா தங்கப்பதக்கம் மற்றும் 'பெர்ஃபெக்ட் டென்' தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட நிறுவனத்தின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளைப் பிரதமர் சிறந்த மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கிறார்.
மேலும், அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், ஐஐடி தில்லியின் சோனிபட் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 'பரம் பிரக்யா' என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த உயர் திறன் சூப்பர் கணினி வசதியைப் பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த அதிநவீன வசதியானது, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், பல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் நிறுவனத்தின் திறன்களை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 2295834)
VJ/SE/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2295906)
வருகையாளர் எண்ணிக்கை : 72
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam