புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பிரதமரின் இல்லந்தோறும் சூரிய மின் சக்தி திட்டம்: 50 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவி சாதனை
प्रविष्टि तिथि:
04 AUG 2026 2:26PM by PIB Chennai
மத்திய அரசின் 'பிரதமரின் இல்லந்தோறும் சூரிய மின் சக்தி திட்டம்' நாடு முழுவதும் 50.06 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ரூ.75,021 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தற்போது ஒவ்வொரு 6 நாட்களுக்கும் 1 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. ஜூலை 2026 மாதத்தில் மட்டும் 5.06 லட்சம் குடும்பங்களில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு அதிகபட்ச மாதாந்திரச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நேரடிப் பணப்பரிமாற்றம் மூலம் இதுவரை ரூ.28,024 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதால், சுமார் 19 லட்சம் குடும்பங்கள் 'பூஜ்யம்' மின்சாரக் கட்டணப் பலனைப் பெற்று வருகின்றன. மேலும், 12 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உபரி மின்சாரத்தை விற்பனை செய்து ஆண்டிற்கு சராசரியாக ரூ.3,500 வரை கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளன.
காகித ஆவணங்களின்றி 100% டிஜிட்டல் முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1.06 லட்சம் அரசு கட்டடங்களிலும் கூரை அமைப்பு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294208®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2294640)
आगंतुक पटल : 9