மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

மின்சக்தி சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய மிதக்கும் சூரிய ஒளி மின்னழுத்தத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக ரூ.5,070 கோடி ஒதுக்கீட்டிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 31 JUL 2026 4:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்ரூ.5,070 கோடி ஒதுக்கீட்டில்மின்சக்தி சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய மிதக்கும் சூரிய ஒளி மின்னழுத்தத் திட்டங்களை மேம்படுத்துவதற்கான பிரதம மந்திரி சூர்ய சரோவர் யோஜனா எனப்படும் பிரதமரின் சூரிய நீர்மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டமானதுகுறைந்தபட்சம் இரண்டு மணிநேர சேமிப்புத் திறன் அதாவது மணிக்கு 10,000 மெகாவாட் கொண்டஅருகருகே அமைந்துள்ள மின்சக்தி சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய 5,000 மெகாவாட் மிதக்கும் சூரிய ஒளி மின்னழுத்தத் திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டங்கள் 2026-27-ம் நிதியாண்டு முதல் 2030-31-ம் நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும்இதற்கான நிதியுதவி 2032-33 நிதியாண்டு வரை தொடர்ந்து வழங்கப்படும்.

தேசிய சூரிய மின்சக்தி நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுநாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள், பிற பொருத்தமான உள்நாட்டு நீர்நிலைகளில் மிதக்கும் சூரிய மின்சக்தித் திறன் 102.18 ஜிகாவாட் என மதிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ்தகுதியான மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்தத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பிறகுஒரு மெகாவாட்டிற்கு ரூ.கோடி மத்திய நிதியுதவி வழங்கப்படும். கூடுதலாகநீர்மட்ட அளவியல், நீரியல் மதிப்பீடுகள் உள்ளிட்ட பிற ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகஒரு திட்டத்திற்கு ரூ.50 லட்சம் வரை மத்திய நிதியுதவி வழங்கப்படும்.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும். இத்திட்டம்நாட்டில் தற்போது சுமார் 700 மெகாவாட்டாக மட்டுமே உள்ள மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்தத் திறனை 5,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும். இந்தத் திட்டங்கள்தற்போதுள்ள நீர்த்தேக்கங்கள், தொழிற்சாலை நீர் நிலைகளை லாபகரமாகப் பயன்படுத்தவும் வாய்ப்பை வழங்கும். இந்தத் திட்டம் ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் டன் கார்பன்  வெளியேற்றத்தைக் குறைக்க உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292433&reg=3&lang=1

***

SS/PLM/RJ/SE


(रिलीज़ आईडी: 2292727) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Odia , English , Khasi , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam