பிரதமர் அலுவலகம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்ததில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 APR 2026 11:22PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்த துரதிர்ஷ்டவசமான விபத்து குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000-மும் நிதி உதவி வழங்கப்படும் என்று திரு மோடி அறிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர்.”
------
(Release ID: 2256802)
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2292267)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam