பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருக்குப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 24 JUL 2026 12:00PM by PIB Chennai

கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

தடகள வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உறுதியுடனும், சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் மனப்பான்மையுடனும் இந்தப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

தடகள வீரர்களின் திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இந்தியர்களுக்கு எப்போதும் ஊக்கமளிப்பதாகப்  பிரதமர் குறிப்பிட்டார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:

 

"கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் #Glasgow2026 தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நமது தடகள வீரர்கள், மிகுந்த ஆர்வத்துடனும், உறுதியுடனும், சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் மனப்பான்மையுடனும் இந்தப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

 

நமது விளையாட்டு வீரர்களின் திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இந்தியர்களுக்கு எப்போதுமே ஊக்கமளிக்கின்றன.

 

@Glasgow_2026"

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289211&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2289238) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Gujarati