பிரதமர் அலுவலகம்
ஏப்ரல் 28-29 தேதிகளில், பிரதமர், உத்தரப்பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 APR 2026 3:46PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏப்ரல் 28-29 தேதிகளில் உத்தரப்பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்வார். ஏப்ரல் 28 ஆம் தேதி மாலை சுமார் 5 மணியளவில், வாரணாசியில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார். அங்கு அவர், சுமார் ரூ.6,350 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.
ஏப்ரல் 29 ஆம் தேதி, காலை சுமார் 8:30 மணியளவில், வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் ஸ்வாமி தரிசனமும் பூஜையும் செய்வார். அதைத் தொடர்ந்து, பிரதமர் ஹர்தோய்க்குச் சென்று, காலை சுமார் 11:30 மணியளவில் கங்கா விரைவுச்சாலையைத் திறந்து வைப்பார்.
வாரணாசியில் பிரதமர் பங்கேற்கும் மகளிர் மாநாட்டில், இப்பகுதி முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொள்வார்கள். பிரதமர், சுமார் ரூ.1,050 கோடி மதிப்பில் நிறைவடைந்த 48-க்கும் மேற்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில், வாரணாசி-அசம்கர் சாலை விரிவாக்கப் பணிகளின் நிறைவு, கஜக்புரா மற்றும் கடிபூரில் முக்கிய ரயில் மேம்பாலங்களின் திறப்பு மற்றும் பகவான்பூரில் நாள் ஒன்றுக்கு 55 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு ஆகியவை அடங்கும்.
வாராணாசியைத் தொடர்ந்து, ஹர்தோய் மாவட்டத்தில் கங்கா விரைவுச்சாலையையும் பிரதமர் திறந்து வைப்பார். இது, நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. கங்கா விரைவுச்சாலை என்பது சுமார் ரூ.36,230 கோடி மொத்த செலவில் கட்டப்பட்ட, 594 கிலோமீட்டர் நீளமுள்ள, 6 வழித்தடங்களைக் கொண்ட, ஒரு புதிய அதிவேகப் பாதையாகும். இந்த விரைவுச்சாலை மீரட், புலந்தஷஹர், ஹாப்பூர், அம்ரோஹா, சம்பல், படௌன், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய 12 மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரே சீரான அதிவேகப் பாதையின் இணைக்கப்படுகிறன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255674®=3&lang=1
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2284227)
வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam