பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு மைல்கல் தருணம் என பிரதமர் பாராட்டு, இது வளர்ச்சி கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார்

प्रविष्टि तिथि: 27 APR 2026 5:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (27.04.2026) இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையில் ஒரு மைல்கல் தருணம் எனப் பாராட்டியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் வளர்ச்சி கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்றும், இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள், கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது வளர்ச்சிக்கு புதிய வழிகளைத் திறக்கும், வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் துறைகள் முழுவதும் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, விவசாயம், உற்பத்தி, புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் மிகவும் வளமான மற்றும் ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

இந்தியா-நியூசிலாந்து கூட்டாண்மையில் இன்று ஒரு மைல்கல் தருணம்!

இன்று கையெழுத்திடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நமது வளர்ச்சி கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நமது இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது வளர்ச்சிக்கு புதிய வழிகளைத் திறந்து, வாய்ப்புகளை உருவாக்கி எல்லா துறைகளிலும் நமது ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும்.

நியூசிலாந்தின் 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, விவசாயம், உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் மிகவும் செழிப்பான மற்றும் ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.’’

பிரதமரின் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

"பிரதமர் திரு நரேந்திரமோடி, இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஆழமான உலகளாவிய ஈடுபாடு மற்றும் பகிரப்பட்ட செழிப்பை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.

இது இரு துடிப்பான ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி, விவசாயிகள், கைவினைஞர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர், பெண்கள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்புகளைத் திறக்கிறது."

"இது விவசாயிகள், இளைஞர்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை உருவாக்கும்.

***

Release ID: 2255990

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2284210) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam