பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி, சிக்கிமின் 50வது உதய தினக் கொண்டாட்டங்களின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 APR 2026 3:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.04.2026), சிக்கிமின் 50வது உதய தினக் கொண்டாட்டங்களின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். மேலும், அம்மாநிலத்தின் கலாச்சாரப் பாரம்பரியம், நிலையான நடைமுறைகள் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு அது ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றிற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சிக்கிம் மக்களே, உங்களின் பாசத்திற்கும் ஆசீர்வாதங்களுக்கும் கைம்மாறு செய்வதில் நான் எதையும் தவறவிட மாட்டேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்."
"சுற்றுச்சூழல் நலவாழ்வு சுற்றுலாவில் சிக்கிமிற்கு மகத்தான ஆற்றல் உள்ளது. நாடு முழுவதும் சுற்றுலா வளர்ச்சியுடன் சேர்த்து இதையும் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.
"சிக்கிமின் இளைஞர்கள் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்கள் களத்தில் தங்கள் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு சிறந்த வசதிகளையும், திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்குவதற்காக மத்திய அரசு பல திட்டங்களில் பணியாற்றி வருகிறது."
"இன்று உலகம் நீடித்த வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசுகிறது. நமது வடகிழக்குப் பகுதியும், குறிப்பாக சிக்கிமும், இதற்கான ஒரு முக்கிய மையமாக உருவெடுத்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது..."
"கேங்டாக்கில் சிக்கிமின் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கண்டது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
ஒரே நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் ஒன்று கூடியது போல் உணர்ந்தேன். மனதைக் கவரும் நிகழ்ச்சிகள் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியை வழங்கின.
இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்."
"கேங்டாக்கில் நிலவிய உற்சாகமும் அன்பும் எனக்குப் புத்துணர்ச்சியை அளித்தன. சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் எனது சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள். தேசிய வளர்ச்சிக்கு சிக்கிம் ஆற்றிய பங்களிப்பைக் கண்டு இந்தியா பெருமிதம் கொள்கிறது. சிக்கிம் மக்கள் பல துறைகளில் சிறந்து விளங்கி, தங்களின் சிறப்பான குணத்திற்காகப் போற்றப்படுகிறார்கள்."
சிக்கிம் மாநிலம் உருவானதன் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் என் சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள். தேசிய வளர்ச்சிக்கு சிக்கிம் ஆற்றிய பங்களிப்பைக் கண்டு இந்தியா பெருமிதம் கொள்கிறது.நரேந்திர மோடி, ஏப்ரல் 28, 2026.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256224®=3&lang=1
***
(Release ID: 2256224)
SS/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2284188)
வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam