தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மலையாள திரைப்படமான கிரீடம் 4கே தரத்தில் மீண்டும் திரையிடப்படுகிறது
प्रविष्टि तिथि:
09 JUL 2026 12:41PM by PIB Chennai
மலையாளத் திரைப்படமான கிரீடம் டால்பி அட்மோஸ் ஒலியுடன் புதுபிக்கப்பட்ட 4கே தரத்தில் 2026 ஜூலை 10 அன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. இந்த புதுபிக்கப்பட்ட பணியை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகமும் மேற்கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட படத்தை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் செவன் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து திரையிடுகிறது. ஹைசின் குளோபல் வென்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தின் விநியோகஸ்தராக உள்ளது.
1989-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் அசல் ஒளிப்பட நெகடிவ் சிதைந்துவிட்டதால் அதைப் பயன்படுத்த இயலவில்லை, எனினும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் அதன் 35 எம் எம் வெளியீட்டு பிரதியை 30 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்துள்ளது. இந்த ஆவணப் பிரதி 4கே புதுப்பித்தலுக்கு அடிப்படையாக அமைந்தது. சிபி மலயில் இயக்கி ஏ கே லோஹிததாஸ் எழுதியுள்ள கிரீடம் திரைப்படத்தில் மோகன்லால் சேது மாதவனாகவும், திலகன் தலைமைக் காவலர் அச்சுதன் நாயராகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மலையாள திரைப்படங்களில் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கூறப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் எஸ் குமார், இயக்குநர் சிபி மலயில் ஆகியோரின் மேற்பார்வையில் இத்திரைப்படம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டால்பி அட்மாஸ் ஒலியுடன் இப்படம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282742®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2283025)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
Kannada
,
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Telugu
,
Malayalam