கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 06 JUL 2026 6:48PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் 5-வது நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர்கள் திரு கிருஷ்ண பால் குர்ஜார், திரு முரளிதர் மோஹோல், ராஜஸ்தான் மாநிலத் தலைமைச் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ், கூட்டுறவு அமைச்சகச் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் புட்டானி, வேளாண்துறைச் செயலாளர் திரு அதிஷ் சந்திரா, கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறைச் செயலாளர் திரு நரேஷ் பால் கங்வார், பல மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தேசிய கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு கூட்டமைப்புகள், கூட்டுறவு வங்கிகள், பால் கூட்டுறவு சங்கங்கள், பாரத் டாக்ஸி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த பிற தரப்பினரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்றைய தினம் நம் அனைவருக்கும் மிகவும் மங்களகரமான தினம் என்று குறிப்பிட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடைய 32 கோடி மக்களுக்கும், நாடு முழுவதும் உள்ள 8.50 லட்சத்திற்கும் அதிகமான கூட்டுறவு நிறுவனங்களுக்கும் இருந்த 75 ஆண்டுகாலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறினார். இதே நாளில்தான், மத்திய அரசின் ஒரு தனித்துவ கூட்டுறவு அமைச்சகத்தை அமைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். அதற்கு முந்தைய 75 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை, பிரதமரின் இந்த முடிவு புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றதாக அவர் கூறினார். மத்திய கூட்டுறவு அமைச்சகத்தை அமைப்பதன் மூலம், கூட்டுறவுத் துறைக்கு பிரதமர் திரு மோடி புத்துயிர் ஊட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, கூட்டுறவு மாதிரியுடன் இயற்கை விவசாயம், சுழற்சிப் பொருளாதாரம், கால்நடைக்கழிவு மேலாண்மை, இயற்கை உரங்கள், எரிசக்தி உற்பத்தி ஆகியவை ஒருங்கிணைக்கப்படுவதாகக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281790&reg=3&lang=1

(Release ID: 2281790)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2281832) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada