ஊரக வளர்ச்சி அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (கிராமின்) சட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமல்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 6:22PM by PIB Chennai
கிராமப்புற வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதிலும், வளர்ச்சியடைந்த கிராமப்புற இந்தியாவை உருவாக்குவதிலும் ஒரு வரலாற்று மைல்கல்லாக, ‘வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (கிராமின்) சட்டம் 2025’ (VB-G RAM G) இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு 125 நாட்கள் உத்தரவாதமான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, இதற்கான புதிய ஊதிய விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் தினசரி ஊதியம் ரூ.300-க்குக் குறைவாக இருக்காது. தேசிய சராசரி ஊதியம் தினசரி ரூ.298.8-லிருந்து ரூ.327.4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 10 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும். இத்திட்டத்தை தங்கு தடையின்றி செயல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முதற்கட்டமாக ரூ.95,692.31 கோடி இடைக்கால நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு இச்சட்டம் கண்ணியமான வாழ்வையும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் வழங்கும் என்றார். 100 நாட்களாக இருந்த வேலைவாய்ப்பு இனி 125 நாட்களாக சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சட்டத்தின் தேசிய அளவிலான தொடக்க விழா, ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், முக்கவாரிபல்லே கிராமத்தில் ஜூலை 2, 2026 அன்று நடைபெறவுள்ளது. இதில் மத்திய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான், ஆந்திர முதல்வர் திரு. என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் திரு. கொனிடேலா பவன் கல்யாண் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அட்டைகளையும், புதிய மென்பொருள் தளத்தையும் தொடங்கி வைக்கவுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279995®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2280134)
आगंतुक पटल : 7