நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு அரசு நீட்டித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUN 2026 11:55AM by PIB Chennai
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு அரசு நீட்டித்துள்ளது.
ஏற்கனவே 17.09.2025 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மேல்முறையீடு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 30.06.2026 என அரசு குறிப்பிட்டிருந்தது.
ஜிஎஸ்டாட் (GSTAT) இணையப் பக்கத்தில், மேல்முறையீட்டு மனுக்கள் அதிக அளவில் பதிவேற்றம் செய்யப்படுவதால் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சனைகள் பற்றி பலரும் முறையீடு செய்ததையடுத்து தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. வரி செலுத்துவோர் கடைசி தேதி வரை காத்திராமல் முன்கூட்டியே மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
***
(Release ID: 2279274)
SS/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2279343)
வருகையாளர் எண்ணிக்கை : 124
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam