பிரதமர் அலுவலகம்
மருந்துத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆற்றல் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 APR 2026 1:11PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் மருந்துத் துறை, 'உலகின் மருந்தகம்' என்ற நிலையிலிருந்து புத்தாக்கங்களின் மையமாக மாறிவருகிறது என்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இத்துறையில் உலகளாவிய போட்டியில் முன்னிலை வகிக்க இந்தியா தயாராகி வரும் நிலையில், தற்போதைய அரசு, விரிவான ஆராய்ச்சி, மேம்பாடு, உயிரி மருந்துகள், அதிநவீன சிகிச்சைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது என பிரதமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"‘உலகின் மருந்தகம்’ என்ற நிலையிலிருந்து புத்தாக்கங்களின் மையமாக, இந்தியாவின் மருந்துத் துறை மதிப்புச் சங்கிலியில் முன்னேறி வருகிறது. தற்போதைய அரசு, விரிவான ஆராய்ச்சி, மேம்பாடு, உயிரி மருந்துகள், அதிநவீன சிகிச்சைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இத்துறையில் உலகளாவிய போட்டியில் முன்னிலை வகிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது என்பது குறித்து, மத்திய அமைச்சர் திரு ஜே பி நட்டாவின் கட்டுரையைக் கட்டாயம் படிக்க வேண்டும்!"
----
(Release ID : 2251811)
SS/PLM/KR
(रिलीज़ आईडी: 2278805)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam