பாதுகாப்பு அமைச்சகம்
நாடாளுமன்றத்தில் ஜூலை 28, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சர் ஆற்றிய உரை தவறாகச் சித்தரிக்கப்படுவது குறித்த அறிக்கை
प्रविष्टि तिथि:
27 JUN 2026 6:00PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் ஜூலை 28, 2025 அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆற்றிய உரையை, தவறாக சித்தரிக்க முயற்சிக்கும் வகையில் சில சமூக ஊடக பதிவுகள் பரவி வருகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, எந்தவொரு இந்திய வீரரும் உயிரிழக்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியதாகத் தவறான தோற்றத்தை உருவாக்கும் வகையில், அந்த உரையின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து, சமூக ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை வேண்டுமென்றே தவறான நோக்கத்துடன் இத்தகைய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாக உள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சரின் நாடாளுமன்ற உரையை, சர்ச்சையாக்க முயன்றவர்கள், அவரது முழுமையான கருத்துக்களை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையாற்றியபோது, ஊடகங்களின் சில பிரிவுகளிலும், சமூக ஊடகங்களிலும், ஒரு குறிப்பிட்ட கருத்து பரப்பப்பட்டு வந்தது என்பதை நினைவுகூர வேண்டும். அதாவது, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, இந்திய விமானிகள் உயிரிழந்ததாக, சமூக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இந்தக் கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். இருப்பினும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை மறைப்பதற்கும், பொதுமக்களின் மன உறுதியைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. அத்தகைய தவறான, தீங்கு விளைவிக்கும் நோக்குடன் பரப்பப்பட்டு வரும் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், பாதுகாப்புத் துறை அமைச்சரின் குறிப்பிட்ட அந்த உரை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அந்த சமயத்தில் ஆபத்தான வகையில் பரவி வந்த உண்மைக்குப் புறம்பான செய்திக்கு எதிராக, சூழலுக்கு ஏற்றவாறு அளிக்கப்பட்ட ஒரு துல்லியமான பதிலாக அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன.
பாதுகாப்புத் துறை அமைச்சரின் உரையை, முழுமையான, சரியான சூழலில் புரிந்துகொள்வதும் அவசியமாகிறது. நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை முழுவதும் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் சிறப்பான வெற்றி குறித்த பெருமைமிக்க, துல்லியமான விளக்கமாக அமைந்திருந்தது. நாட்டின் பாதுகாப்புப் படைகளின் இணையற்ற துல்லியம், உறுதிப்பாடு, ராணுவத் தொழில்முறைத் திறனை வெளிப்படுத்திய நடவடிக்கையாக அமைந்ததிருந்தது. இந்த நடவடிக்கையின் போது, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் வீரர்கள் அழிக்கப்பட்டனர். அத்துடன், பாகிஸ்தானின் விமானத் தளங்கள், கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகள் ஆகியவற்றிற்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்தியப் பாதுகாப்புப் படைகளின் துணிச்சல், சிறப்பான செயல் திறனுக்குச் செலுத்திய அஞ்சலியாகவும், இந்தியாவுக்குத் தீங்கு விளைவிக்க விரும்புவோருக்கு விடுக்கப்பட்ட தெளிவான எச்சரிக்கையாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சரின் உரை அமைந்திருந்தது.
இந்தியப் பாதுகாப்புப் படைகளின் ஒவ்வொரு வீரரிடமும், குறிப்பாக நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களிடமும், பாதுகாப்புத் துறை அமைச்சரும், மத்திய அரசும் மிகுந்த மரியாதையையும், நன்றியுணர்வையும் கொண்டுள்ளனர். அவர்களின் தியாகம் தாய்நாட்டிற்கான மிக உயர்ந்த சேவையாகும். அது எப்போதும் அதற்குரிய கண்ணியம், பெருமை, கம்பீரத்துடன் போற்றப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278444®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2278461)
आगंतुक पटल : 16