பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் சுகாதார மற்றும் நல்வாழ்வு சூழல் அமைப்பில் ஹோமியோபதியின் ஒருங்கிணைந்த பங்கை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 APR 2026 1:06PM by PIB Chennai
இந்தியாவின் பன்முகத் தன்மை வாய்ந்த சுகாதார, நல்வாழ்வுச் சூழல் அமைப்பில் ஹோமியோபதி எவ்வாறு ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக உருவெடுத்துள்ளது என்பதை விளக்கும், மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தன் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தக் கட்டுரையில், மத்திய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் ( @mpprataprao), ஹோமியோபதி எவ்வாறு இந்தியாவின் பன்முகத் தன்மை வாய்ந்த சுகாதார மற்றும் நல்வாழ்வுச் சூழல் அமைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உருவெடுத்து, ஒரு முழுமையான மற்றும் நோயாளிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் உள்ளது என்பதை விளக்குகிறார்.
ஆழமான சமூகப் பிணைப்பு, நிலையான அணுகுமுறை ஆகியவற்றைக் கொண்ட ஹோமியோபதி, மருத்துவத் துறையில் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை அடைவதற்கான ஒரு வழியாக உள்ளது என்பதை இணையமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்."
***
(Release ID: 2250706)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2277659)
வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam