மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்தோரின் எண்ணிக்கை 31 மில்லியனை கடந்தது
प्रविष्टि तिथि:
22 JUN 2026 3:29PM by PIB Chennai
ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 5 மாதங்களுக்குள்ளாக 31 மில்லியன் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு, நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தங்களுடைய விரல் நுணியில் சேவைகளை எளிதாக பெரும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளதால், மக்களிடையே இதன் பயன்பாடு அதிகரிக்கிறது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்கும் வகையில் உள்ள இந்தப் புதிய ஆதார் செயலி மூலம், மொபைல் எண், முகவரி புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்கள் தங்களுடைய ஸ்மார்ட் போன்களில் இருந்தே எளிதாக பெற முடியும்.
இதுவரை 4 மில்லியன் பேர் புதிய ஆதார் செயலி மூலம் தங்களுடைய மொபைல் எண்களை புதுப்பித்துள்ளனர். அதே சூழலில் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களுடைய முகவரியை புதுப்பிக்க இந்த செயலியை பயன்படுத்தி உள்ளனர்.
ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்தவும், பகிரவும், சரிபார்க்கவும் வசதியுடன் கூடிய தனி உரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு வழியாக இந்த ஆதார் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலியில் பயன்மிக்க அம்சங்கள் உள்ளன. உதாரணமாக ஒரே கிளிக்கில் பயோமெட்ரிக் செயல்படுத்துதல், செயலிழக்கச் செய்தல், இருத்தலுக்கான ஆவணமாக முகம் சரிபார்ப்பு, கியூஆர் அடிப்படையிலான தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட வசதிகள் இதில் அடங்கும். அத்துடன் ஈ ஆதார் நகலை பதிவிறக்கம் செய்யவும், ஆதார் சேவை மையங்களுக்கு செல்வதற்கான முன்பதிவை ஆன்லைனில் எளிதாக மேற்கொள்ளவும் உதவுகிறது.
இந்த ஆதார் செயலி யதார்த்த வாழ்க்கையில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது. இதில் நேரடி சரிபார்த்தல் நிறுவனங்களின் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஓட்டல்களில் தங்குவதற்கான பதிவு செய்தல் போன்றவையும் அடங்கும். மருத்துவமனையில் அனுமதித்தல், வருகையாளர் மேலாண்மை, நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் போன்ற பல பயன்பாடுகளுக்கும் இது உதவுகிறது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276583®=3&lang=1
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2276785)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Assamese
,
Gujarati
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Kannada