19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா நிறைவு: தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன
கடந்த ஒரு வார காலமாக மும்பையில் நடைபெற்று வந்த 19-வது சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று (21.06.2026) ஆவணப்படம், குறும்படம், அனிமேஷன் பிரிவுகளில் சிறந்த படைப்புகளுக்கு மொத்தம் 17 விருதுகள் வழங்கப்பட்டன. போலந்து நாட்டின் 'சில்வர்' ஆவணப்படம் சிறந்த சர்வதேச ஆவணப்படத்திற்கான மிக உயரிய 'தங்கச் சங்கு' விருதையும், பத்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் வென்றது. ஈரானின் 'அண்டர் தி ஸ்னோ' சிறந்த சர்வதேச குறும்படத்திற்கான வெள்ளிச் சங்கு விருதையும், ஜெர்மனியின் 'மாயாஸ் சாங்' சிறந்த அனிமேஷன் படத்திற்கான வெள்ளிச் சங்கு விருதையும் பெற்றன. தேசியப் போட்டிகளில், தமிழ் அனிமேஷன் படமான 'அங்காளம்மன் கோவில் தெருவிலிருந்து ஆம்ஸ்ட்ராங்', 'ஸ்மால் க்ளவுட்ஸ்' குறும்படம், 'வாய்' ஆவணப்படம் ஆகியவை வெள்ளிச் சங்கு விருதுகளைப் பெற்றன. 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தலைப்பிலான சிறந்த குறும்பட விருதை 'தி லாஸ்ட் ஷெல்டர்' வென்றது. இவ்விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற மகாராஷ்டிர ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, படைப்பாற்றல் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, திரைப்படக் கலைஞர்களின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு ஆகியவை குறித்தும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276314®=3&lang=1
***
SS/PD
रिलीज़ आईडी:
2276562
| Visitor Counter:
8