உள்துறை அமைச்சகம்
குற்றவியல் சட்டங்களில் அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான விரிவான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது - உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா
प्रविष्टि तिथि:
19 JUN 2026 5:46PM by PIB Chennai
குற்றவியல் சட்டங்களில் அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான விரிவான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா தெரிவித்தார்.
புதுதில்லியில் நடைபெற்ற 26-வது அகில இந்திய கைரேகை மாநாட்டின் தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள உரிமைகளை நிலைநாட்டுவதற்கு, குற்றவியல் நீதி அமைப்பை ஒரு பயனுள்ள, பொருத்தமான கருவியாக மாற்ற வேண்டிய தருணம் இது என்று அவர் கூறினார்.
நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும் பணிகளில், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் மூன்று செயலிகளை அவர் தொடங்கி வைத்தார். இவை நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும், உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் உதவிடும்.
ஆகஸ்ட் 2019 முதல், குற்றவியல் சட்டங்களில் அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான விரிவான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். குற்றவியல் நீதி அமைப்பை நவீனமயமாக்குவதுடன், அறிவியல், தொழில்நுட்பத்தை அதன் ஒருங்கிணைந்த அம்சமாக மாற்றுவதும் இதன் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது முதல், குற்றவாளிக்குத் தண்டனை விதிக்கப்படுவது வரை உள்ள செயல்முறையை, மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து நீதியை உறுதி செய்வதே மத்திய அரசின் குற்றவியல் நீதிச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குள் நீதி கிடைப்பதை உறுதி செய்ய அரசு ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்கி வருவதாக திரு. அமித் ஷா கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு இந்த முக்கிய இலக்கை எட்டும் நிலையில் இருப்பதாகவும், இந்தப் பயணத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் புலனாய்வுப் பிரிவு இயக்குநர், தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குநர், மத்திய தடய அறிவியல் ஆய்வக இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2275306®=3&lang=1
(Release ID: 2275306)
***
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2275739)
आगंतुक पटल : 11