பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் அகமதாபாத்தில் முதல் உலக யோகாசன விளையாட்டுப் போட்டி தொடங்கும் நிலையில், யோகாவின் உலகளாவிய புகழை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
प्रविष्टि तिथि:
03 JUN 2026 10:31PM by PIB Chennai
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை (ஜூன் 4) நடைபெறவுள்ள 'முதல் உலக யோகாசன விளையாட்டுப் போட்டி 2026'-ன் தொடக்கத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் யோகா அபரிமிதமான புகழைப் பெற்று வருவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
யோகாசனத்திற்கான உலகளாவிய விளையாட்டு வரைபடத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள இந்தத் தளம், உலகம் முழுவதிலுமிருந்து யோகா ஆர்வலர்களை ஒன்றிணைத்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். நாளை மாலை சுமார் 6:40 மணியளவில் தொழில்நுட்பம் வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பதாகத் திரு மோடி அறிவித்தார். மேலும், இந்த புதுமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைப் பாராட்டிய அவர், இதில் பங்கேற்கும் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“உலகம் முழுவதும் யோகா அபரிமிதமான வரவேற்பைப் பெற்று வருகிறது! அகமதாபாத்தில் நாளை, அதாவது ஜூன் 4-ஆம் தேதி, 'முதல் உலக யோகாசன விளையாட்டுப் போட்டி 2026' என்ற மிகச் சிறப்பான நிகழ்வு தொடங்குகிறது. இப்போட்டி உலகம் முழுவதிலுமிருந்து யோகா ஆர்வலர்களை ஒன்றிணைத்துள்ளது. யோகாசனத்திற்கான உலகளாவிய விளையாட்டுப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். நானும் நாளை மாலை சுமார் 6:40 மணியளவில் தொழில்நுட்பம் வாயிலாக இந்நிகழ்ச்சியில் இணையவுள்ளேன். இத்தகைய புதுமையான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கு எனது பாராட்டுகளையும், இதில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@yogasanabharat
@worldyogasana"
(Release ID: 2268699)
***
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2275687)
आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam