பிரதமர் அலுவலகம்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
20 JUN 2026 8:32AM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
துணிச்சல், எளிமை, பணிவு, பொதுச் சேவையில் வலுவான அர்ப்பணிப்புணர்வு ஆகிய பண்புகளுடன் கூடிய அவரது பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பொது வாழ்வில் பல ஆண்டுகளாகத் தேசத்திற்குச் சிறப்பான சேவையாற்றியுள்ள குடியரசுத் தலைவர், குறிப்பாகப் பின்தங்கிய, விளிம்புநிலை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதை திரு மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்புணர்வு மிகவும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
தேச சேவையில் அவர் நீண்ட ஆரோக்கியமான ஆயுளுடன் திகழ வேண்டும் என்று திரு மோடி பிரார்த்தனை செய்ததுடன், ஒடிசாவில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அவரைச் சந்திப்பதில் ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். துணிச்சல், எளிமை, பணிவு, பொதுச் சேவையில் உறுதியான அர்ப்பணிப்புணர்வு போன்ற பண்புகளுடன் கூடிய அவரது பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
பொது வாழ்வில் பல ஆண்டுகளாகத் தேசத்திற்குச் சிறப்பான சேவையாற்றியுள்ள அவர், குறிப்பாகப் பின்தங்கிய, விளிம்புநிலை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு மிகவும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
தேச சேவையில் அவர் நீண்ட ஆரோக்கியமான ஆயுளைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஒடிசாவில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், அவரைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275553®=3&lang=1
(Release ID: 2275553)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2275615)
आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam