பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் ஏற்பட்ட படகு விபத்து குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 APR 2026 6:00PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குப் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் தீவிரமாக வழங்கி வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் படகு கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தால் ஆழ்ந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது."
---
(Release ID: 2250885)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2275157)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada