பிரதமர் அலுவலகம்
புகழ் பெற்ற புத்த அறிஞர் ராபர்ட் ஏ எஃப் துர்மன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
18 JUN 2026 5:30AM by PIB Chennai
ராபர்ட் ஏ எஃப் துர்மன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
பிரபல புத்த அறிஞரான துர்மன், சிறந்த ஆசிரியராகவும் இந்தியாவின் நீண்டகால நண்பராகவும் விளங்கினார் என்று பிரதமர் கூறியுள்ளார். தமது பணிகள் மூலம் புத்த சிந்தனைகளை உலக அளவில் பிரபலப்படுத்தினார் என்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான புரிதலுக்கு பாலமாகத் திகழ்ந்தார் என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் நகரில், துர்மனுடனான தமது சந்திப்புக் குறித்து நினைவுகூர்ந்துள்ள பிரதமர், தங்களுடைய உரையாடல் சிறப்பாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் துயரமான தருணத்தில் துர்மனின் குடும்பத்தினர், நண்பர்கள், அவரைப் பின்பற்றுவோர் ஆகியோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சிறந்த ஆசிரியராகவும் இந்தியாவின் நீண்டகால நண்பராகவும் திகழ்ந்த புகழ் பெற்ற புத்த அறிஞர் ராபர்ட் ஏ எஃப் துர்மனின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது. தமது பணிகள் மூலம் புத்த சிந்தனைகளை உலக அளவில் பரப்பினார், மேலும் கலாச்சாரங்களுக்கு இடையேயான புரிதலுக்கு பாலமாகத் திகழ்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் நகரில் நடைபெற்ற எங்களுடைய சந்திப்புக் குறித்தும் அப்போது நடந்த சிறப்பான உரையாடல் குறித்தும் நான் நினைவுகூர்கிறேன். இந்தத் துயரமான தருணத்தில் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், அவரைப் பின்பற்றுவோர் ஆகியோருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274373®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2274744)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam