வடகிழக்கு மாநிலங்களில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை காட்சிப்படுத்தும் வகையில், மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது
மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில், கலாச்சார வளம் மிக்க வடகிழக்கு மாநிலங்களில் தயாரிக்கப்படும் குறும் புனைகதைகள், ஆவணப் படங்களைத் திரையிடுவதற்காக சிறப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு ஜூன் 15 முதல் 21 வரை நடைபெறவுள்ள இந்தத் திரைப்பட விழாவில், நாட்டின் வடகிழக்குப் பகுதியின் வளமையான மரபுகள், வரலாறு, சூழலியல் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் திரைப்படங்கள் அமைந்துள்ளன. குறிப்பிடத்தக்க ஆளுமைகள், நீடித்த மரபுகள், பல்வேறு சமூகங்கள், மாறிவரும் புவிசார் அமைப்புகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தும் சித்தரிப்புகள் மூலம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் பல்வேறு அம்சங்களை இத்திரைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. காசி, நாகாமிஸ், ஆவோ, கோக்போரோக், பூட்டியா, அசாமி, மணிப்பூரி, மிசோ போன்ற உள்நாட்டு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படங்கள், அப்பகுதியின் அன்றாட வாழ்க்கையை வடிவமைக்கும் பாரம்பரியம், அடையாளம், மன உறுதி, இயற்கையின் எழில் கொண்ட எழுச்சிமிக்க கலவையைத் திரைப்பட விழாக் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன.
சங்கிரங் எல் கோங்விர் இயக்கியும், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்காக பொன்விஷால் சிதம்பரநாதன் தயாரித்ததுமான 'கா பதெங்', இந்தியாவைச் சேர்ந்த 30 நிமிட காசி மொழி குறும் புனைகதை திரைப்படமாகும்.
ஒரு தாயின் மறைவுக்குப் பிறகு, பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த மூன்று உடன்பிறப்புகள் மீண்டும் ஒன்றுசேர்வதை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் நீண்ட காலம் வசித்த பிறகு சொந்த ஊருக்குத் திரும்பும் மூத்த சகோதரன், வேதனையான குழந்தைப் பருவ நினைவின் சுமைகளைச் சுமக்கும் சகோதரன், விரைவில் தாய்மைப்பேறு அடையவிருக்கும் இளைய சகோதரி, தாய்மை குறித்துச் சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு ரகசியம் குறித்தும் இந்தத் திரைப்படம் விவரிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274025®=3&lang=1
***
SS/SV/SH
रिलीज़ आईडी:
2274207
| Visitor Counter:
7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada