உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

12 ஆண்டுகாலத்தில் மக்களைப் பாதுகாக்கும் அதே சூழலில் எதிரிகளை அழிக்கும் பாதுகாப்பு அரணாக இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUN 2026 2:13PM by PIB Chennai

கடந்த 12 ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் திரு நரேந்திர மோடி அரசின் சாதனைகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று சுட்டிக்காட்டியுள்ளார். திரு மோடி அரசின் இந்த 12 ஆண்டுகாலத்தில் மக்களைப் பாதுகாக்கும் அதே சூழலில் எதிரிகளை அழிக்கும் பாதுகாப்பு அரணாக இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது:

“12 ஆண்டு காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் அதே சூழலில் எதிரிகளை அழிக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக நமது நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் எதிரிகளுக்கு எதிராக துல்லியத் தாக்குதல், வான்வழித் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் ஆகியவற்றின் மூலம் பதிலடி கொடுப்பதோ, பிரிவு 370-ஐ ரத்து செய்வதோ, நக்ஸல் செயல்பாடுகளை ஒழிப்பது அல்லது வடகிழக்குப் பகுதியில் 12-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோ, எதுவாக இருப்பினும் நாட்டின் பாதுகாப்பில் தமது உறுதியான அர்ப்பணிப்பை உலகிற்கு உணர்த்தும் வகையில் இந்தியா முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.”

***

(Release ID: 2273943)

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2274194) வருகையாளர் எண்ணிக்கை : 46