பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசிய நிலவரம் குறித்த செய்தியாளர் சந்திப்பு
நாட்டில் உரங்களின் ஒட்டுமொத்த கையிருப்பு திருப்திகரமாக உள்ளது
கடந்த 4 நாட்களில் 1.84 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
15 JUN 2026 6:07PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் மாறிவரும் சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு தொடர்ச்சியான முயற்சிகள் தொடர்கிறது. இது தொடர்பாக, இன்று (15.06.2026) தேசிய ஊடக மையத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள், எரிபொருள் இருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள இந்தியக் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கினர்.
ரசாயனம், உரங்கள் அமைச்சகமும், நாட்டில் உள்ள உரங்களின் இருப்பு, கையிருப்பு நிலவரம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
நாட்டில் உரங்களின் ஒட்டுமொத்த கையிருப்பு நிலை திருப்திகரமாக உள்ளது.
2026-ம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான உரத் தேவையை வேளாண் துறை 383.9 லட்சம் மெட்ரிக் டன்னாக மறுமதிப்பீடு செய்துள்ளது. இதற்கு மாறாக, இன்றைய நிலவரப்படி கையிருப்பு சுமார் 196.65 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. இது வழக்கமான அளவான சுமார் 33%-ஐ விடக் கணிசமாக அதிகமாகும். இது அரசின் மேம்பட்ட திட்டமிடல், முன்கூட்டியே கையிருப்பு வைத்தல், திறமையான போக்குவரத்து மேலாண்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
இந்திய விவசாயிகள், நடைபெற்று வரும் கரீஃப்-2026 பருவத்தில் 14.06.2026 வரை, மொத்தமாக 102.78 லட்சம் மெட்ரிக் டன் ரசாயன உரங்களை ஏற்கெனவே பெற்றுள்ளனர். இது மொத்தத் தேவையின் ஏறத்தாழ 27% ஆகும்.
நாட்டில் இயற்கை உரக் கையிருப்பு சுமார் 22.60 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.
இந்தியாவின் உரப் பாதுகாப்பு வலுவாகவும், நிலையானதாகவும், சிறப்பாக நிர்வகிக்கப்படுவதாகவும் உள்ளதுடன், அனைத்து முக்கிய உரங்களின் இருப்பும் தொடர்ந்து தேவையை விட அதிகமாகவே இருக்கிறது.
மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், பெட்ரோலியப் பொருட்கள், எல்பிஜி ஆகியவற்றின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விவரித்து, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் தற்போதைய எரிபொருள் விநியோக நிலவரம் குறித்த ஒரு தகவலை வழங்கியது. அதில் பின்வருவன குறிப்பிடப்பட்டன:
* அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்புடன் உயர் திறனில் இயங்கி வருகின்றன. அதேவேளையில் போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
* உள்நாட்டு நுகர்வுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையங்களில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு எல்பிஜி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில், சுமார் 1.66 கோடி எல்பிஜி சிலிண்டர்களுக்கான முன்பதிவுகளுக்கு எதிராக, ஏறத்தாழ 1.84 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பாரசீக வளைகுடாவில் நிலவும் கடல்சார் சூழல் குறித்த சமீபத்திய தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் அமைச்சகம் வழங்கியது. அப்பகுதியில் உள்ள இந்தியக் கப்பல்கள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் அதில் விரிவாகக் கூறப்பட்டன.
கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் மூலம், இதுவரை 3,587-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 96 மணி நேரத்தில் வளைகுடாப் பிராந்தியத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 50 பேர் வந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் துறைமுகச் செயல்பாடுகள் இயல்பாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273138®=3&lang=1
(Release ID : 2273138)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2273302)
आगंतुक पटल : 14