பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வுக்குப் பிரதமர் வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUN 2026 1:21PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இந்த மோதல் உலகெங்கிலும் கடுமையான பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியதோடு, பல உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புரிந்துணர்வைச் செயல்படுத்துவது, பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கவும், கப்பல், வர்த்தகச் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யவும் உதவும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து, ஒரு நிலையான இறுதி உடன்பாட்டை எட்டுவதை இந்தியா எதிர்நோக்குவதாகவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தி, பல நாடுகளில் உயிர் இழப்புகளுக்கும் வழிவகுத்த மேற்கு ஆசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வை நான் வரவேற்கிறேன்.

 

இந்தப் புரிந்துணர்வைச் செயல்படுத்துவது, அந்தப் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கவும், கப்பல் போக்குவரத்து, வர்த்தகச் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகிறது.

எஞ்சிய பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான இறுதி உடன்பாட்டை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்."

***

(Release ID : 2272900)

SS/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2273050) வருகையாளர் எண்ணிக்கை : 58