உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புகழ்பெற்ற விளையாட்டு வீரர் ஜஸ்பால் ராணாவின் மறைவிற்கு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUN 2026 12:54PM by PIB Chennai

புகழ்பெற்ற விளையாட்டு வீரர் ஜஸ்பால் ராணாவின் மறைவிற்கு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நேசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும் தனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“புகழ்பெற்ற விளையாட்டு வீரர் ஜஸ்பால் ராணாவின் மறைவு வேதளை அளிப்பதாக உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்ததுடன் சிறந்த பயிற்சியாளராக பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார்.

துப்பாக்கி சுடும் போட்டிகளில் தனது திறமையை நிலைநாட்டுவதற்காக அவர் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். ராணாவின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அவரை நேசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

(Release ID:2272021)

TV/SV/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2272122) வருகையாளர் எண்ணிக்கை : 36