பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நிர்வாக நடவடிக்கைகள் மக்களுக்கு பலன்களாக அமைவதை உறுதி செய்வதை வலியுறுத்தி எடுத்துரைக்கும் பீகார் முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான நிதிஷ் குமார் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 10:01PM by PIB Chennai

பீகார் முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு நிதிஷ் குமார் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக நீண்டகாலம் பிரதமராக பொறுப்பு வகிக்கும் திரு நரேந்திர மோடிக்கு இக்கட்டுரையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலையின் போது ஏற்பட்ட இடர்பாடுகளை நினைவு கூர்ந்துள்ள இக்கட்டுரை, அரசின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டு, நிர்வாக நடவடிக்கைகள் மக்களுக்கு பலன்களாக அமைவதை உறுதி செய்வதற்கான பிரதமர் திரு மோடியின் தலைமைத்துவம் முக்கிய அம்சமாக திகழ்கிறது என்று குறிப்பிடுகிறது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக நீண்டகாலம் பிரதமராக பொறுப்பு வகிக்கும் திரு நரேந்திர மோடிக்கு பீகார் முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு நிதிஷ் குமார் இக்கட்டுரையில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவசர நிலையின் போது ஏற்பட்ட இடர்பாடுகளை அவர் நினைவு கூர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டு, நிர்வாக நடவடிக்கைகள் மக்களுக்கு பலன்களாக அமைவதை உறுதி செய்வதற்கான பிரதமர் திரு மோடியின் தலைமைத்துவம் முக்கிய அம்சமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார்.”

*

TV/IR/RJ/SE


(रिलीज़ आईडी: 2271891) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam