நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - நேபாளம் நாடுகளிடையே, இருதரப்பு நிதி இணைப்பு நடைமுறைகளை வலுப்படுத்த ஏதுவாக, எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை வழிமுறையைத் தொடங்கியுள்ளன

प्रविष्टि तिथि: 11 JUN 2026 3:47PM by PIB Chennai

டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைக்கான இணைப்புஅண்டை நாடுகளின் ஒத்துழைப்புக்கு பெரும் உந்துசக்தியாக திகழும் வகையில்இந்தியா -  நேபாளம் நாடுகளிடையேஜூன் 6, 2026 அன்றுபரஸ்பரம் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைக்கான வழிமுறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.

புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த நடைமுறைஇந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை அமைப்பிற்கும்நேபாளத்தின் தேசிய பணப் பரிவர்த்தனை அமைப்பிற்கும் இடையேநேரடி இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைப்புஇரு நாடுகளின் மக்களும்மொபைல் வங்கிச் செயலிகள்டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வாயிலாக நேரடியாகதடையற்றநிகழ்நேரபாதுகாப்பான உடனடிப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள உதவுகிறது.

இந்த பணப் பரிவர்த்தனைக்கான இணைப்புநிதிசார் உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிப்பதாக உள்ளது. மேலும்யுத்த நடைமுறைஇந்தியா - நேபாளம் இடையேவலுவான பொருளாதார,  டிஜிட்டல் நட்புறவை மேம்படுத்த வகை செய்கிறது. இதுஎளிதாகப் பயன்படுத்தும் வகையிலும்பாதுகாப்பானகுறைந்த செலவில்எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளுக்கான பிராந்திய இலக்குகளுடன் பொருந்தும் வகையிலும் உள்ளது. நீண்டகால சமூக மற்றும் பொருளாதாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது. இந்தத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு நடவடிக்கைஇந்திய தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகத்தின்சர்வதேசப் பிரிவு,நேபாளத்தின் நேபாள் கிளியரிங் ஹவுஸ் லிமிடெட் நிறுவனம் இடையேயான ஒத்துழைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271613&reg=48&lang=1

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2271829) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam