நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நித்தி ஆயோக்கின் 11-வது நிர்வாகக் குழுக் கூட்டம் - பிரதமர் தலைமையில் நாளை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 10 JUN 2026 1:36PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஜூன் 11) புது தில்லியில் நடைபெறும் நித்தி ஆயோக்கின் 11-வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குத் தலைமை வகிக்கவுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, "2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடையும் நோக்கில் அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு" என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளதுவயது, பிராந்தியம், பாலினம் அல்லது சமூக-பொருளாதாரப் பின்னணி பேதமின்றி ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்விலும் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான அணுகுமுறை குறித்து இந்த நிர்வாகக் குழு கூட்டம் விவாதிக்கும்.

இந்த கூட்டத்தில் நான்கு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாட்டுக் கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்படும்.

 (i) அடித்தள மனித மூலதனமும் எதிர்காலத்திற்குத் தயாரான திறன்களும்;

(ii) வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, பரவலாக்கப்பட்ட வளர்ச்சி;

(iii) சுகாதாரம், ஊட்டச்சத்து, நல்வாழ்வு;  (iv) சமத்துவம், கண்ணியம்

ஆகியவை அந்த நான்கு முக்கிய அம்சங்களாகும்.     

இக்கூட்டத்தில், தொழில்முனைவை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டை அதிகரித்தல், நாடு முழுவதும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும். இக்கூட்டத்தில் முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271043&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2271309) आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam