பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுக்கான பரிந்துரைகளை 2026 ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்

प्रविष्टि तिथि: 09 JUN 2026 3:48PM by PIB Chennai

பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது 2026-க்கான இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க 2026 ஜூலை 31 கடைசி நாளாகும். அனைத்து விண்ணப்பங்களையும் https://awards.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது இந்தியாவில் வசிக்கும் 5 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பங்களை சுயமாகவும் அனுப்பலாம், பிறருக்கும் பரிந்துரைக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அடிப்படை தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு துணை ஆவணங்களுடன் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். தங்களுடைய சாதனை, அதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்து 1000 வார்த்தைகள் வரையிலான குறிப்புகளையும் அவர் சமர்ப்பிக்க வேண்டும்.  6 பிரிவுகளில்  இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளது.

துணிச்சல், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய பிரிவுகளில் பிரதமரின் தேசிய குழந்தைகள்  விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270698&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2270851) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam