பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அண்டை நாடுகளையும் பிற வளர்ந்த நாடுகளையும் விட சமையல் எரிவாயு விலை தொடர்ந்து இந்தியாவில் மிக குறைவாகவே உள்ளது

प्रविष्टि तिथि: 07 JUN 2026 8:02AM by PIB Chennai

அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளை விட மிகக் குறைந்த விலையில் இந்திய குடும்பங்கள் சமையல் எரிவாயுவைத் தொடர்ந்து வாங்கி வருகின்றன. பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளி ஒருவர் 14.2 கிலோ சிலிண்டருக்கு 642-ம், தில்லியில் உள்ள ஒரு பொது நுகர்வோர் 942-ம் செலுத்துகின்றனர். ஆனால், எரிவாயுவை வழங்குவதற்கான செலவு தற்போது 1,600-ஐத் தாண்டியுள்ளது.

பிற நாடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை - இந்திய ரூபாய் மதிப்பில்:

பாகிஸ்தான்      - 1,046

நேபாளம்            - 1,207

பங்களாதேஷ்  - 1,225

இலங்கை          - 1,241

 அமெரிக்கா        - 1,755

ஆஸ்திரேலியா   - 1,765

கனடா                    - 2,411

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை, சர்வதேச சந்தையில் அதற்கேற்ற விலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும்வீட்டு உபயோக எல்பிஜிக்கான நுகர்வோருக்கான விலையை அரசு தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது. எந்தவொரு குடும்பமும் தங்களுக்குத் தேவையான சிலிண்டர்களை 942-க்கு வாங்கிக்கொள்ளலாம். உஜ்வாலா பயனாளி, ஒவ்வொரு ஆண்டும் முதல் நான்கு முறை சிலிண்டர் நிரப்பும்போது, ஒரு சிலிண்டருக்கு 300 என்ற நேரடிப் பணப் பரிமாற்றத்தையும் கூடுதலாகப் பெறுவார். அந்த நிரப்புதல்களுக்கு அவர் பயனுள்ள வகையில் 642 செலுத்துகிறார். இந்த ஆதரவுத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. உஜ்வாலா திட்டத்தில் சேராத ஒரு குடும்பமும் கூட, சிலிண்டரின் சந்தை விலையை விட சுமார் 700 குறைவாகவே செலுத்துகிறது. விநியோகச் செலவுகள் காரணமாக, சில்லறை விலைகள் இடங்களுக்கு ஏற்ப சிறிதளவு வேறுபடுகின்றன.

ஒரு சிலிண்டருக்கு ஆகும் பல நூறு ரூபாய் செலவை அரசு ஏற்றுக்கொள்வதால், அதன் பெரும் சுமை குடும்பங்கள் மீது விழுவதில்லை. கடுமையான சர்வதேச விலை உயர்வுக் காலத்தில், அந்தச் சுமை நுகர்வோர் மீது சுமத்தப்படாமல், மூல உற்பத்தியாளர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உணவகங்கள், வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் தானாகவே திருத்தப்படுகிறது. ஏனெனில் அதன் விலை சர்வதேச அளவுகோலின் நேரடிப் பிரதிபலிப்பாகும். வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை அவ்வாறு இல்லை. இந்தியா தனது எல்பிஜி தேவைகளில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வந்தது. மேலும் அந்த இறக்குமதியின் இறக்குமதிச் செலவு, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் சவுதி அராம்கோ நிர்ணயிக்கும் சவுதி ஒப்பந்த விலையைப் (CP) பொறுத்தே அமைகிறது. இது இந்திய நுகர்வோருக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஒரு புற விலையாகும்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, விலை கடுமையாக உயர்ந்தது. இந்தியாவின் எல்பிஜி-க்கு பயன்படுத்தப்படும் 50:50 புரொபேன்-பியூட்டேன் கலவையாகக் கணக்கிடப்படும் சவுதியின் எல்பிஜி விலை, நெருக்கடிக்கு முன்பு பிப்ரவரியில் ஒரு டன்னுக்கு சுமார் 543 அமெரிக்க டாலராக இருந்தது. பிப்ரவரி பிற்பகுதியில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து ஒரு டன்னுக்கு 775 அமெரிக்க டாலராக உயர்ந்தது. அப்போது புரொபேன் விலை 750 அமெரிக்க டாலராகவும், பியூட்டேன் விலை 800 அமெரிக்க டாலராகவும் இருந்தது. அதன் பிறகு, ஜூன் மாதத்தில் இந்த விலை மேலும் அதிகரித்து ஒரு டன்னுக்கு 790 அமெரிக்க டாலராக ஆனது. இவ்வாறு, கலப்பு எல்பிஜி அளவுகோல் விலை, நெருக்கடிக்கு முந்தைய பிப்ரவரி மாத அளவிலிருந்து சுமார் 46% உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருளின் விலையும் அதனுடன் உயர்ந்தது.

ஜூன் மாத ஒப்பந்த விலையைத் தொடர்ந்து, இறக்குமதியுடன் இணைந்த அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டால், 14.2 கிலோ சிலிண்டரை வழங்குவதற்கான செலவு 1,600-ஐத் தாண்டியுள்ளது. ஒவ்வொரு வீட்டு உபயோக சிலிண்டரிலும் தற்போது ஈடுசெய்யப்படாத தொகை சுமார் 700 ஆகும். இதன் முழு அளவையும் முழுமையான சந்தை விலையுள்ள வர்த்தக சிலிண்டரில் காணலாம்: மேற்கு ஆசிய நெருக்கடியின் போது ஏற்பட்ட ஐந்து விலை உயர்வுகளுக்குப் பிறகு, ஹோட்டல்கள், உணவகங்களால் பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் தில்லியில் 3,113.50-க்கு விற்கப்படுகிறது.

இந்த சிக்கல்களின்போதும் தடையற்ற விநியோகத்திற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச விலைகளில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், மத்திய அரசு பல ஆண்டுகளாக இந்தியக் மக்களுக்கு உலகின் மிகக் குறைந்த விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

நுகர்வோர் இந்த விலைமதிப்பற்ற வளத்தைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறும், எரிசக்தி சிக்கனத்துடன் சமையல் முறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269944&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2269976) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam