மத்திய அமைச்சரவை
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
05 MAY 2026 7:22PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை (தலைமை நீதிபதியைத் தவிர்த்து) தற்போதுள்ள 33-லிருந்து 37 ஆக, அதாவது 4 நீதிபதிகள் கூடுதலாக, உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக 1956-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை சட்டத்தைத் திருத்தும் மசோதா, 2026-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உச்ச நீதிமன்றம் மேலும் திறமையாகவும் செயல்திறனுடனும் செயல்பட்டு, விரைவான நீதியை உறுதிசெய்ய வழிவகுக்கும்.
நீதிபதிகள், துணைப் பணியாளர்களின் சம்பளம், இதர வசதிகளுக்கான செலவினங்கள், ஒருங்கிணைந்த நிதியிலிருந்து ஈடுசெய்யப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, 1956-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் பிரிவு 2, (தலைமை நீதிபதியைத் தவிர்த்து) அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 10 ஆக இருக்க வேண்டும் என்று வழிவகை செய்தது. 1960-ம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் மூலம் 13 ஆகவும், 1977-ம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் மூலம் 17 ஆகவும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
1986-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்தச் சட்டம், இந்தியத் தலைமை நீதிபதியைத் தவிர்த்து, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை 17-லிருந்து 25-ஆக மேலும் உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்தச் சட்டம், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை 25-லிருந்து 30-ஆக உயர்த்தியது.
2019-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்தச் சட்டத்தின் மேலும் திருத்தம் செய்து, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை ( தலைமை நீதிபதியைத் தவிர்த்து) கடைசியாக 30-லிருந்து 33-ஆக அதிகரிக்கப்பட்டது.
(Release ID : 2258131)
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2269824)
आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada