பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வியட்நாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு டோ லாம்-க்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 APR 2026 12:32PM by PIB Chennai

சோலிசக் குடியரசான வியட்நாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு டோ லாம்-க்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

புதிய அதிபரின் தலைமை குறித்து நம்பிக்கை தெரிவித்த பிரதமர், இந்தியா-வியட்நாம் இடையே உள்ள நட்பு தொடர்ந்து மேலும் வலுப்பெறும் என்று குறிப்பிட்டார். இரு நாடுகளின் மக்களுக்கும், இப்பிராந்தியத்திற்கும் முன்னேற்றத்தையும் செழுமையையும் கொண்டுவரும் வகையில், நமது விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த, அவருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகத் திரு மோடி மேலும் கூறினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"சோலிசக் குடியரசான வியட்நாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு டோ லாம்-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவரது தலைமையின் கீழ், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு தொடர்ந்து மேலும் வலுப்பெறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நமது மக்களின் மற்றும் இப்பிராந்தியத்தின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக, நமது விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத், அவருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்."

***

SS/IR/RJ/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2268871) வருகையாளர் எண்ணிக்கை : 16