தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனம் முதுகலை, முதுகலை பட்டய படிப்புகளுக்கான சேர்கையை தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
03 JUN 2026 4:09PM by PIB Chennai
நாட்டின் மிகவும் மதிப்புமிக்க ஊடகக் கல்வி நிறுவனமான இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனம் (ஐஐஎம்சி) ஆறு முதுகலை (எம்ஏ), நான்கு முதுகலை பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான இணையவழிக் கலந்தாய்வு நடைமுறையை தொடங்கியுள்ளது. இதற்கான பதிவுகளை https://iimc.admissions.nic.in/ என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் 2026 ஜூன் 7 ஆகும். முதல் சேர்க்கைப் பட்டியல் ஜூன் 9 அன்று வெளியிடப்படும்.
இந்த ஆண்டு, ஐஐஎம்சி மூன்று புதிய எம்ஏ பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை சுகாதார தகவலியல், ஊடகம் மற்றும் தகவல், பெருநிறுவன தகவல் மற்றும் பிராண்ட் மேலாண்மை ஆகியவையாகும். இதன் மூலம், ஐஐஎம்சி தற்போது அதன் ஆறு கல்வி நிறுவனங்களில் (புதுதில்லி, தேன்கனல், ஐஸ்வால், அமராவதி, ஜம்மு, கோட்டயம்) ஆறு எம்ஏ படிப்புகளை வழங்குகிறது என்று மாணவர் சேர்க்கை பொறுப்பாளரும், தேர்வுக் கட்டுப்பாட்டாளருமான பேராசிரியர் (டாக்டர்) ராகேஷ் குமார் கோஸ்வாமி கூறினார்.
ஐஐஎம்சியின் பாரம்பரிய பாடப் பிரிவுகளான நான்கு முதுகலைப் பட்டய படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவை ஆங்கிலம், இந்தி, வானொலி மற்றும் தொலைக்காட்சி இதழியல் மற்றும் விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவையாகும்.
இது தொடர்பான விவரங்களை iimc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஏதேனும் கேள்விகள் இருப்பின், விண்ணப்பதாரர்கள் admissions@iimc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268390®=3&lang=1
****
TV/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2268586)
आगंतुक पटल : 12