பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லடாக்கின், புதுமை, வளமையை எடுத்துக்காட்டும் கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 JUN 2026 1:07PM by PIB Chennai

லடாக்கில், புதிய வாய்ப்புகளுக்கான சாத்தியக்கூறுகளை  எடுத்துக்காட்டும் வகையில், மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

லடாக் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட பெர்ரி பழம், புதுமை,  வாய்ப்புகளை எடுத்துரைப்பதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தொழில்முனைவு, மதிப்புக்கூட்டுதல் போன்றவை லடாக்கில், வளமைக்கான புதிய வாய்ப்புகளுக்கு எவ்வாறு வழி வகுக்கிறது என்பது குறித்து இந்தக் கட்டுரை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும், உலகளவில் முன்னணி நாடாக உருவெடுப்பதற்கு, உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னெடுத்துச் செல்வது குறித்த ஆழ்ந்த கண்ணோட்டம் இது என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"லடாக் பகுதியில் விளையும் பெர்ரி பழம், புதுமை, வாய்ப்புகளின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைக்கிறது. தொழில்முனைவும், மதிப்புக் கூட்டு நடவடிக்கைகளும், லடாக்கில் வளத்திற்கான புதிய வழிகளை உருவாக்குகிறது என்பது குறித்த மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் எழுதியுள்ள கட்டுரை வலுவான பிரதிபலிப்பாக உள்ளது!

“உலகளவில், முன்னணி நாடாக உருவெடுப்பதற்கு, "உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்பதை நாம் எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறோம் என்பது குறித்த ஆழ்ந்த கண்ணோட்டம் இது.”

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2268533) வருகையாளர் எண்ணிக்கை : 68