ரெயில்வே அமைச்சகம்
காசிபேட் ரயில் உற்பத்தி பிரிவில் நகரங்களுக்கு இடையேயான ரயில்களின் உற்பத்தி விரைவில் தொடங்கும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
प्रविष्टि तिथि:
28 MAY 2026 3:59PM by PIB Chennai
இந்திய ரயில்வேயின் காசிபேட் ரயில் உற்பத்திப் பிரிவின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இது ஒரு பன்முகப் பயன்பாடுள்ள ரயில் பெட்டிகள் உற்பத்திப் பிரிவாகும். முதற்கட்டமாக, அடுத்த 5 ஆண்டுகளில் காசிபேட் 200 நகரங்களுக்கு இடையேயான ரயில்களை உற்பத்தி செய்யும். மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ரயில்வே இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர், மூத்த அதிகாரிகளுடன் இணைந்து காசிபேட் ரயில் உற்பத்திப் பிரிவைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்களை ஆய்வு செய்தனர்.
இந்த ரயில்கள் நாடு முழுவதும் குறுகிய தூரப் பயணங்களுக்காக இயக்கப்படும். இந்த ரயில்கள் பொதுவாக சுமார் 300 கி.மீ. தூரம் வரை செல்லும். ஒவ்வொரு பயணத்திலும் பல நிறுத்தங்கள் இருப்பதால், குடிமக்கள் நகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் இடையில் எளிதாகப் பயணிக்க முடியும். அருகிலுள்ள நகரங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் இந்த சேவை பயன்படும்.
இந்த ரயில்கள், நகரங்களுக்கு இடையேயான பயணத்தில் மக்களுக்கு ஒரு புதிய, மலிவு விலைத் தேர்வை வழங்கும். இந்த நகரங்களுக்கு இடையேயான ரயில்கள், இந்தியா முழுவதும் அருகருகே உள்ள நகரங்களை இணைக்கும் ஷட்டில் சேவைகளைப் போல இயங்கும். இந்த ரயில்களின் உற்பத்தியால், பெருமளவிலான உள்ளூர் போக்குவரத்து, சாலைகளிலிருந்து ரயிலுக்கு மாற வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266232®=3&lang=1
***
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2268226)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada